பொது செய்தி

தமிழ்நாடு

முன்னோடி விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

Added : நவ 11, 2019
Advertisement

விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த காணை குப்பத்தில் முன்னோடி விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
முகாமிற்கு, விழுப்புரம் மாவட்ட மத்திய திட்ட வேளாண் துணை இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். காணை வட்டார வேளாண் உதவி இயக்குநர் சரவணன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், துணை இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் பேசும் போது,''பிரதமரின் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு பிரதி மாதம் ரூ.500 -வீதம் நான்கு மாதங்களுக்கு ரூ.2000- ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், விடுபட்ட விவசாயிகளை சேர்க்க வேண்டும்.மேலும், பிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெற வேண்டும். மேலும், சுற்றுப்புற சூழ்நிலை மாசுபடுவதை தடுக்க, விவசாயிகள் அதிகப்படியான மரப்பயிர்களை வரப்பு ஓரங்களிலும், தரிசு நிலங்களிலும் சாகுபடி செய்ய வேண்டும'' என்று பேசினார். .பயிற்சியில் அம்மா பண்ணை மகளிர் குழுவிற்கு சுய தொழில் செய்ய ரூ.10 ஆயிரம் சுழல் நிதி வழங்கப்பட்டது. அப்போது, வேளாண் அலுவலர் வரதராஜன், வட்டார தொழில் நுட்ப மேலாளர் தமிழ்ச்செல்வி, உதவி வேளாண் அலுவலர்கள் மணிவண்ணன், பிரபாகரன், செல்வகுமார் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் அன்பு, இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X