பொது செய்தி

தமிழ்நாடு

பெண்கள் மேல்நிலை பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படுமா?

Added : நவ 11, 2019
Share
Advertisement

திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். சுற்றுவட்டார கிராமங்களில் பள்ளிகள் இருந்தாலும், பெற்றோர்கள் மாணவிகளுக்கான பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அதிக மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். பொதுவாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், இப்பள்ளியில் மட்டும் மாணவிகள் சேர்க்கை அதிகரித்து கொண்டே வருகின்றது.மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லை. சமீபத்தில் மிகவும் பழமையான, பழுதடைந்த 5 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்து, அரசு உடனடியாக இடித்து அப்புறப்படுத்தியது.இதனால் அந்த கட்டிடத்தில் இயங்கிய ஐந்து வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் மாவட்ட கல்வி அலுவலகம், பொதுத் தேர்வு வினாத்தாள்களை பாதுகாப்புடன் வைப்பதற்காக இப்பள்ளி வளாகத்தில் 5 வகுப்பறைகளை ஸ்டாங் ரூமாக மாற்றி வைத்துள்ளது.
இதன் காரணமாக பத்தாம் வகுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் 70 மாணவர்கள் விகிதம் 6 பிரிவுகள் இயங்குகிறது. மேலும், வகுப்பறையில் அதிக மாணவர்களை கவனிக்க வேண்டிய சூழல் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டிருப்பது, மாணவிகளுக்கு தரமான கல்வியை போதிக்க முடியுமா என்ற கேள்வியை பெற்றோர்கள் மத்தியில் எழுப்ப வைத்துள்ளது.மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவகையில் கூடுதல் வகுப்பறைகளை கட்ட கல்வித்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X