சாலை விபத்துக்களை தடுப்பதற்காக மெகா சைஸ் கண்ணாடி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்துக்களை தடுப்பதற்காக மெகா சைஸ் கண்ணாடி

Added : நவ 11, 2019
Share
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை நகர் ரயில்வே மேம்பாலத்தில், வாகன விபத்துக்களைத் தடுப்பதற்காக வளைவு பகுதியில் மெகா சைஸ் கண்ணாடி அமைக்கும் பணியினை எஸ்.பி., பார்வையிட்டார்.உளுந்தூர்பேட்டை பகுதியில் வாகன விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகின்றது. தொடர் விபத்துக்களை தடுக்கும் வகையில் விழுப்புரம் எஸ்.பி., பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.இதற்கிடையில்,

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை நகர் ரயில்வே மேம்பாலத்தில், வாகன விபத்துக்களைத் தடுப்பதற்காக வளைவு பகுதியில் மெகா சைஸ் கண்ணாடி அமைக்கும் பணியினை எஸ்.பி., பார்வையிட்டார்.
உளுந்தூர்பேட்டை பகுதியில் வாகன விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகின்றது. தொடர் விபத்துக்களை தடுக்கும் வகையில் விழுப்புரம் எஸ்.பி., பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
இதற்கிடையில், உளுந்தூர்பேட்டை நகர் ரயில்வே மேம்பால வளைவு பகுதியில் வாகனங்கள் வருவது தெரியாததாலும், அதிவேகத்தாலும் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பால வளைவு பகுதியில் மெகா சைஸ் கண்ணாடி அமைக்கும் பணி நடந்தது.இந்தப்பணிகளை எஸ். பி., ஜெயக்குமார் பார்வையிட்டார். இதில், டி.எஸ்.பி., விஜயகுமார், இன்ஸ்பெக்டர் எழிலரசி, தனி பிரிவு சப் இன்ஸ்பெக்டர் மோகன், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் தேவயிரக்கம், உதவி கோட்ட பொறியாளர் கவிதா, திறன்மிகு உதவியாளர்கள் மஞ்சுளா, கோதண்டபாணி, உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X