பொது செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., விழிப்புணர்வு முகாம்

Added : நவ 11, 2019
Advertisement

திருக்கோவிலூர்:ரிஷிவந்தியம் தொகுதி பா.ம.க., சார்பில், மணலூர்பேட்டையில் நூதன முறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ரிஷிவந்தியம் தொகுதி பா.ம.க., சார்பில், மணலூர்பேட்டை பேரூராட்சியில், நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாமிற்கு மாநிலத் துணைத் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.பொதுமக்கள் மத்தியில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விளக்கப்பட்டதுடன், இரண்டு கிலோ பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஒரு கிலோ தரமான அரிசியை மாவட்ட செயலாளர் பாலசக்தி வழங்கினார்.நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு 75 கிலோ அளவிற்கு தரமான அரிசி வழங்கப்பட்டது. இதில், ஒன்றிய செயலாளர் சங்கர், நகர செயலாளர் சரவணன், நகர தலைவர் கோவிந்தராஜ், திருக்கோவிலூர் தொகுதி அமைப்பு செயலாளர் சரவணகுமார், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் குமரகுருபரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X