பொது செய்தி

தமிழ்நாடு

நடைபாதை கடைகளால் போக்குவரத்து நெரிசல்

Added : நவ 11, 2019
Share
Advertisement

விழுப்புரம்:விழுப்புரம் மார்க்கெட் வீதியில், நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
விழுப்புரம் எம்.ஜி., ரோட்டில், பழக்கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால், எம்.ஜி., ரோடு எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்பட்டு வருகின்றது.இச்சாலையில் நாளுக்கு, நாள் நடைபாதை கடைகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகின்றது. இதனால், சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தினந்தோறும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X