பொது செய்தி

தமிழ்நாடு

மேலச்சேரி மத்தளேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

Added : நவ 11, 2019
Advertisement
 மேலச்சேரி மத்தளேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

செஞ்சி:செஞ்சி அருகே மேலச்சேரி மத்தளேஸ்வரர் குடவரைக் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
செஞ்சி தாலுகா மேலச்சேரி கிராமத்தில் கி.பி., 7 ம் நூற்றாண்டை சேர்ந்த பிரகன்நாயகி அம்பிகை சமேத மத்தேளஸ்வரர் குடைவரைக் கோயில் உள்ளது.குடைவரை கோயிலின் முன் மண்டபங்கள் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதையடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து பல லட்சம் ரூபாய் மதிப்பில் மண்டபங்களையும், குடைவரை கோவிலையும் புதுப்பித்துள்ளனர். இந்த கோவிலின், கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.இதை முன்னிட்டு கடந்த 8ம் தேதி காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை, கோ பூஜை, வருண பகவான் வழிபாடு. கணபதி, லட்சுமி, நவகிரக ஹோமம் நடந்தது. மாலை 5 மணிக்கு விநாயகர் கும்ப அலங்கார மண்டப பூஜை மூலமந்திர ஹோமம் ஆகியன நடந்தது.தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு நான்காம் கால பூஜையும், மகா பூர்ணாஹுதியும், காலை 9.15 மணிக்கு யாத்ரா தானமும், 9.30 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், 10 மணிக்கு மூலவர் மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.இதில் திருப்பணிக்குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X