பொது செய்தி

தமிழ்நாடு

மண்வள அட்டை அவசியம் வேளாண் அதிகாரி அறிவுரை

Added : நவ 11, 2019
Advertisement

கோவில்பாளையம்:'ஒவ்வொரு தோட்டத்திற்கும் மண்வள அட்டை பெறுவது அவசியம்' என, வேளாண் உதவி இயக்குனர் அறிவுறுத்தினார்.தேசிய மண்வள அட்டை இயக்கத்தின்கீழ், சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தில், கொண்டையம்பாளையம், மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில், அனைத்து விவசாயிகளின் நிலங்களிலிருந்தும், மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு, கோவை மண் ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டது. ஆய்வு முடிவுகள், மண்வள அட்டையில் குறிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. மண்வள அட்டையை அடிப்படையாகக் கொண்டு, அந்தந்த விவசாய நிலங்களில், செயல் விளக்க திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.இத்திட்டத்தில், வட்டார வேளாண் அலுவலகத்தில் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. அதன்பின் வயல்வெளியில் செயல்விளக்க கூட்டம் நடந்தது.இதில் உதவி இயக்குனர் நிர்மலா பேசுகையில், ''மண்வள அட்டை மூலம், எந்த பயிர் செய்யலாம். எந்த சத்து அதிகம் உள்ளது. எது குறைவாக உள்ளது என, தெரிந்து கொள்ளலாம். இதனால் சரியான அளவு உரம் இட்டால் போதும். செலவும் குறையும். ஒவ்வொரு தோட்டத்திற்கும் மண்வள அட்டை பெறுவது அவசியம்,'' என்றார்.வேளாண் அலுவலர் மாணிக்க வாசகம், மண் பரிசோதனை நிலைய அலுவலர் கீதாலட்சுமி, துணை வேளாண் அலுவலர் அங்கராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X