பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் நிறுத்தம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் நிறுத்தம்

Added : நவ 11, 2019
Share

திண்டிவம்::திண்டிவனத்தில் பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை, போலீசார் தலையிட்டு தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் ரோஷணை பள்ளி வாசலில் உள்ள திருமண மண்பத்தில், 17 வயது நிரம்பிய பிளஸ் 1 படிக்கும் மாணவிக்கு திருமணம் நடக்க இருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் சென்றது.கலெக்டர் உத்தரவின் பேரில், திண்டிவனம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜி, சமூக நல விரிவாக்க அலுவலர் அம்சவேணி, ரோஷணை காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அருள், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி உள்ளிட்டவர்கள், ரோஷணை பள்ளி வாசலுக்கு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் வந்தவாசியை சேர்ந்த 17 வயது, பிளஸ் 1 படித்து வரும் சிறுமிக்கும், திண்டிவனம் அடுத்த நல்லாளம் கிராமத்தை சேர்ந்த அன்சர் மகன் அப்துல் பஷீர், 27; என்பவருக்கும் நேற்று காலை திருமணம் நடக்க இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து, திருமண கோலத்தில் இருந்த அப்துல் பஷீர் மற்றும் அந்த சிறுமியையும், போலீசார் திண்டிவனம் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.தொடர்ந்து, மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரிடம், மைனர் பெண்ணிற்கு திருமணம் செய்வது சட்டப்படி தவறு என்று அறிவுரை வழங்கி, அந்த சிறுமியை, விழுப்புரம் சமூக நலத்துறைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X