மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அடுத்த ராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், வேளாண் பல்கலை மாணவிகள், மருத்துவச் செடிகள் கொண்ட சிறு தோட்டம் அமைத்துள்ளனர்.தமிழ்நாடு வேளாண் பல்கலை இறுதியாண்டு பயிலும் மாணவிகள், கிராம தங்கல் திட்டத்தில், காரமடையில், களப்பணி மேற்கொண்டுள்ளனர். ராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சிறு தோட்டம் அமைத்துள்ளனர். அதில் மருத்துவ குணங்கள் கொண்ட துளசி, கற்றாழை, துாதுவளை, கீரைகள், திருநீற்று பச்சிலை, இரணகல்லி மற்றும் வெண்டை ஆகிய செடிகளை நடவு செய்து, அதன் பயன்களை பள்ளி மாணவர்களுக்கு விளக்கினர்.மேலும், 'மழை பெற மரங்கள் அதிகம் நடவேண்டும். அதனால் மாணவ, மாணவிகள் வீடுகள் மற்றும் ஊரில் உள்ள காலியிடங்களில் மரக்கன்றுகளை நட்டு அதை நன்கு பராமரிக்க வேண்டும்' என, அறிவுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE