கண்டுகொள்ளாத பேரூராட்சி மக்களால் சீரமைக்கப்பட்டது சாலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கண்டுகொள்ளாத பேரூராட்சி மக்களால் சீரமைக்கப்பட்டது சாலை

Added : நவ 11, 2019
Share

மேட்டுப்பாளையம்:காரமடை அருகே, பல ஆண்டுகளாக சீரமைக்காத சாலையை, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சீரமைத்துள்ளனர்.காரமடை பேரூராட்சி, 4வது வார்டில், காந்தி நகர், காமராஜ் நகர், கே.கே.நகர், முல்லை நகர், குறிஞ்சி நகர், மலையரசி நகர் ஆகிய பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
காமராஜ் நகர் ரயில் பாலம் பகுதியில் சாலை உள்ளது. இப்பகுதி மக்கள் இந்த சாலை வழியாக காரமடை, மேட்டுப்பாளையத்துக்குச் சென்று வருகின்றனர். இச்சாலையை முறையாகப் பராமரிக்காததால், குண்டும், குழியுமாக பயன்படுத்த முடியாத நிலையை அடைந்தது. மழைக் காலங்களில் சேறும், சகதியுமாக மாறி விடும்.
இச்சாலையை சீரமைக்கும்படி பலமுறை கோரிக்கை விடுத்தும், பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக பெய்த மழையால், சாலை முற்றிலும் சேதமடைந்தது. பேரூராட்சி நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இழந்த பொது மக்கள், நிதி திரட்டி, சாலையை சீரமைத்தனர்.காமராஜ் நகர் மக்கள் கூறுகையில், 'பேரூராட்சி நிர்வாகம் எந்த பணியையும் செய்வதில்லை. அதனால், நிதி திரட்டி, சாலையை சீரமைத்தோம்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X