பொது செய்தி

தமிழ்நாடு

மொபைல்போன் பறிப்பு அதிகரிப்பு: அன்னூர் மக்கள் அதிர்ச்சி

Added : நவ 11, 2019
Advertisement

அன்னுார்:அன்னுாரில் மொபைல் போன் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.அன்னுார் -- மேட்டுப்பாளையம் ரோட்டில், மன்னாரம் கம்பெனி அருகில், நேற்று முன்தினம் இரவு, பொகலுாரை சேர்ந்தவர் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவரை ஒட்டியபடி பல்சர் பைக்கில் இருவர் வந்துள்ளனர். பைக்கை ஓட்டியவர் ெஹல்மெட் அணிந்துள்ளார். பின்புறம் அமர்ந்தவர் ெஹல்மெட் அணியவில்லை.பின்புறம் அமர்ந்திருந்தவர் திடீரென பொகலுார் நபரின் சட்டை பாக்கெட்டுக்குள் கையை விட்டு மொபைலை எடுத்து விட்டு மின்னல் வேகத்தில், பல்சர் பைக்கில் சென்று விட்டனர்.அவர்கள் பாக்கெட்டில் கையை விட்டதால், வண்டி குலுங்கி சாய்ந்து விழுந்து விட்டது. அதன்பிறகு எழுந்து சுதாரித்து துரத்துவதற்குள், பல்சர் பைக் சென்று விட்டது.இதேபோல் கடந்த வாரம் சிறுமுகை ரோட்டில், சாரதா மில் அருகே, பைக்கில் சென்ற தொழிலாளியிடம், ெஹல்மட் அணிந்த இருவர் மொபைல்போன் பறித்துக் கொண்டு தப்பினர். பறித்த ஆசாமிகள், ஈரோடு மாவட்டத்திலுள்ள சின்ன கள்ளிப்பட்டி கிராமத்திற்குள் சென்று தப்பி விட்டனர்.மேலும், அன்னுார் பஸ் ஸ்டாண்டில், வார சந்தை நாளான சனிக்கிழமையன்று அதிக அளவில் மொபைல்போன்கள் திருடப்படுகின்றன. போலீசார் வாகன தணிக்கை மற்றும் வாகன சோதனையை அதிகப்படுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X