பொது செய்தி

தமிழ்நாடு

மாணவியருக்கு சிறப்பு பஸ் வசதி: அமைச்சரிடம் கோரிக்கை

Added : நவ 11, 2019
Advertisement

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே அசோகபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள், பாதுகாப்புக்காக தினமும் மாலையில் மட்டும் தனிபேருந்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,550 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கவுண்டம்பாளையம், சுப்பிரமணியம்பாளையம், உருமாண்டம்பாளையம், துடியலுார், வடமதுரை, அப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, தினமும் பஸ்களில் வந்து செல்கின்றனர். காலையில் பள்ளிக்கு வரும்போது எவ்வித பிரச்னையும் இருப்பதில்லை. ஆனால், மாலை, 4:00 மணியளவில் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது இடிகரை, செங்காளிபாளையத்தில் இருந்து வரும் பஸ்களில் ஏறி செல்லவேண்டும். அந்த நேரத்தில் வரும் பஸ்களில் கல்லுாரி மாணவர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். இவர்கள் பேருந்துகளில் ஏறும் அரசுப் பள்ளி மாணவிகளை, தகாத முறையில் பேசி, கேலி செய்வதால், மாணவியர் கூனிக்குறுக வேண்டியுள்ளது.சில நேரங்களில் பெண் ஆசிரியர்களும் இதற்கு ஆளாகின்றனர். பொதுமக்களே கண்டித்தாலும், இந்த அருவருக்கத்தக்க செயல்கள் தொடர்கின்றனை.இதனால், அரசுப் பள்ளி மாணவியருக்கு என, மாலை நேரங்களில் சிறப்பு பேருந்து வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் என, தமிழக முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில், அமைச்சர் வேலுமணி மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.மேலும், தவறாகப் பேசி, அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடும் கல்லுாரி மாணவர்களை கண்டிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X