பெண்ணிடம் நகை பறிப்பு :பைக்கில் வந்த இருவருக்கு வலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் நகை பறிப்பு :பைக்கில் வந்த இருவருக்கு வலை

Added : நவ 11, 2019

சூலுார்:வீட்டின் முன் நின்றிருந்த பெண்ணிடம், நான்கு சவரன் நகை பறித்து தப்பிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சூலுார் எஸ்.கே.கே., நகரை சேர்ந்த சுகுமாறன் மனைவி சாரதா, 59. இவர், சம்பவத்தன்று வீட்டிற்கு முன் நின்றிருந்தார். அப்போது, அவ்வழியே ெஹல்மெட் அணிந்து பைக்கில் வந்த இருவர், போன் பேசிக்கொண்டே சாரதா அருகில் வந்தனர்.ஒருவர் பைக்கில் இருந்து இறங்கி, சாரதா அணிந்திருந்த, நான்கு சவரன் நகையை பறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினார். இதுகுறித்து சூலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X