மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் நகராட்சியில் உயர்த்தப்பட்ட வரிகள் அடிப்படையில், சொத்துவரி வசூல் செய்யப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் உயர்த்திய வரி, அதிகமாக உள்ளது. எனவே, இந்த வரி உயர்வை குறைக்க வேண்டும் என, 25 பேர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.இதில், 23 வழக்குகளுக்கு நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார். 23 நபர்களும், நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்தும் அவர்கள் வரி கட்டாமல் காலம் கடத்தி வந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.நகராட்சி கமிஷனர் காந்திராஜ் கூறியதாவது:வரி உயர்வு குறித்து, 25 பேர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். அவர்கள், வரி மறு சீராய்வு மனு கொடுத்தனர். நகராட்சி பணியாளர்களை கொண்டு விசாரணை செய்ததில், 'உயர்த்திய வரி சரிதான். அதிகமாக உயர்த்தவில்லை' என, தெரியவந்தது. அதனால், 25 பேரும், நகராட்சிக்கு, 21 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். அவர்களுக்கு சொத்துவரியை செலுத்தும்படி, நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் வரியை செலுத்தாமல் காலம் கடத்தி வருகின்றனர்.இறுதியாக, அனைவருக்கு ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரியை செலுத்தவில்லை என்றால், ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கமிஷனர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE