சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள் கண் முன் தாய் பலி

Added : நவ 11, 2019
Advertisement

சூலுார்:திண்டுக்கல் மாவட்டம் கெங்குவார்பட்டியை சேர்ந்த பெருமாள் மனைவி மகேஸ்வரி, 55. இவரது மகள் சந்தியா, சூலுார் அடுத்த நீலம்பூரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.திருப்பூரில் நடந்த உறவினர் திருமணத்துக்கு சென்று விட்டு, நேற்று மதியம் மகேஸ்வரி, சந்தியா மற்றும் பேத்தியுடன் மொபட்டில், கருமத்தம்பட்டியில் இருந்து நீலம்பூர் நோக்கி வந்தனர். கோழிப்பண்ணை அருகே சர்வீஸ் ரோட்டில் வந்தபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, மொபட் மீது மோதியது. இதில், மூவரும் கீழே விழுந்தனர். அப்போது, மகேஸ்வரியின் மீது லாரி ஏறியதால், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். காயமடைந்த சந்தியா மற்றும் அவரது குழந்தை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X