பொது செய்தி

தமிழ்நாடு

'அம்மா' ஸ்கூட்டருக்கு  விண்ணப்பிக்க அழைப்பு 

Added : நவ 11, 2019
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தில், 'அம்மா' ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு, உழைக்கும் பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க மானியம் தரும் திட்டத்தை, மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இந்த ஆண்டு, அன்னுார் ஒன்றியத்தில், 132 பேருக்கு ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. 18 முதல் 40 வயது வரையுள்ள வேலைக்கு செல்லும் அல்லது சுயதொழில்

அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தில், 'அம்மா' ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு, உழைக்கும் பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க மானியம் தரும் திட்டத்தை, மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இந்த ஆண்டு, அன்னுார் ஒன்றியத்தில், 132 பேருக்கு ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. 18 முதல் 40 வயது வரையுள்ள வேலைக்கு செல்லும் அல்லது சுயதொழில் செய்யும் பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். வருமான சான்று, ஓட்டுனர் உரிமம், ஆதார், பாங்க் பாஸ் புக், போட்டோ, வேலை சான்று அல்லது சுய தொழில் சான்று ஆகியவற்றுடன், அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலுள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.'ஸ்கூட்டரின் விலையில் பாதி அல்லது 25 ஆயிரம் ரூபாய், இதில் எது குறைவோ அது வழங்கப்படும். விண்ணப்பிப்பவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு உடனே உத்தரவு வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, அன்னுார் மகளிர் திட்ட அலுவலகத்தை அனுகலாம்' என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X