பொது செய்தி

தமிழ்நாடு

விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு :விரிவாகும் நெடுஞ்சாலை!

Added : நவ 11, 2019
Advertisement

அன்னுார்:'கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்கத்திற்கு, விரிவான திட்ட அறிக்கை, மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது' என, திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில், ஒன்றாக என்.எச். 209 உள்ளது. இது, திண்டுக்கல்லில் துவங்கி, உடுமலை, பொள்ளாச்சி, கோவை, கோவில்பாளையம், அன்னுார், புளியம்பட்டி, சத்தி, பண்ணாரி வழியாக கர்நாடகா செல்கிறது.
இதில், சரவணம்பட்டி அடுத்த குரும்பபாளையத்தில் இருந்து, கர்நாடக மாநில எல்லை வரை, 96 கி.மீ., துாரத்திற்கு, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.இதற்காக பெங்களூரைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்திடம், சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு அறிக்கை, விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.இந்த விரிவாக்கத்தில், குரும்பபாளையத்தில் இருந்து புதிய புறவழிச்சாலை, 19 கி.மீ., துாரம் சென்று, அன்னுாரை அடைகிறது. குரும்பபாளையத்தில் 4 கி.மீ., துாரத்திற்கும், சத்தியமங்கலத்தில், 2.5 கி.மீ., துாரத்திற்கும் புறவழிச்சாலை அமைகிறது.சத்தியிலிருந்து பண்ணாரி வழியாக, கர்நாடக எல்லை வரை இந்த விரிவாக்க பணி நடக்க உள்ளது. குரும்பபாளையம், கோவில்பாளையம் முதல் அன்னுார் வரை, பெத்தநாயக்கன்பாளையம் முதல் புளியம்பட்டி வரை, சத்தியமங்கலத்தில் என, நான்கு புறவழிச்சாலைகள் இதில் அமைகிறது.மற்ற இடங்களில், ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்படுகிறது. குரும்பபாளையம் முதல் பண்ணாரி வரை, நான்கு வழிச்சாலையும், அங்கிருந்து கர்நாடகா எல்லை வரை இருவழிச்சாலையும் அமைக்கப்பட உள்ளது.இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர் உதயசங்கர் கூறியதாவது:இத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட கன்சல்டன்சி நிறுவனம், முதல் கட்ட பணிக்கான விரிவான அறிக்கையை சமர்ப்பித்து விட்டது. இந்த அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், நிலத்தில் கல் நடுவது, கையகப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் துவங்க உள்ளன. ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு, 2.5 கி.மீ., மேற்கே இந்த புதிய சாலை அமைய உள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள பாதையில் அதிக அளவில் கட்டடங்கள் இல்லை. காலி நிலங்கள் தான் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.அன்னுார் நகரில், 20 ஆண்டுகளாக கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களிலும், விசேஷ நாட்களிலும், கி.மீ., கணக்கில் வாகனங்கள் நெரிசலில் சிக்கித்தவிக்கின்றன.
இந்நிலையில் என்.எச். 209 விரிவாக்கத்திற்கான திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வலியுறுத்த வேண்டும்!அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ.,வும் சபாநாயகருமான தனபால், அன்னுார் ஒன்றியத்தை உள்ளடக்கிய நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா ஆகியோர் மத்திய அரசை வலியுறுத்தி, இந்த திட்டத்திற்கு உடனே ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X