பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு ஏக்கரில் ரூ.1 கோடி வருவாய் தரும் புது திட்டம்

Added : நவ 11, 2019
Advertisement

அன்னுார்:'ஒரு ஏக்கரில், ஒரு கோடி ரூபாய் வருமானம் பெற முடியும்' என, ஈஷா வேளாண் காடுகள் வளர்ப்பு திட்ட ஆர்வலர்கள் தெரிவித்தனர்.தமிழகத்தை பசுமையாக்கும் முயற்சியில், 'ஈஷா வேளாண் காடுகள் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஒரு பகுதியாக, 'காவேரி கூக்குரல் விழிப்புணர்வு பயணம்' நடந்தது.இதை தொடர்ந்து தமிழக மேற்கு மண்டலத்தில், ஒரு லட்சத்து 30 மரங்கள் நட திட்டமிடப்பட்டது.நேற்று அன்னுார் அடுத்த வடுகபாளையத்தில், வஞ்சிமுத்து என்பவரின் தோட்டத்தில், எட்டு ஏக்கரில், 3,200 மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது. இதில் செம்மரம், ஈட்டி, சந்தனம் மற்றும் வேங்கை மரக்கன்றுகள் நடப்பட்டன.ஈஷா ஆர்வலர்கள் கூறுகையில், 'ஒரு ஏக்கருக்கு, 400 மரக்கன்றுகள் என, தேர்வு செய்து நடுகிறோம். இவை, 15 ஆண்டுகளில் குறைந்தது ஒரு கோடி ரூபாய் வருமானம் தரக்கூடியவை. வறட்சியை தாங்கி வளரக்கூடிய ரகங்களை நடுகிறோம். இவை பூமிக்கும், சுற்றுச்சூழலுக்கும் பயன் தரக்கூடியவை. அன்னுார் வட்டாரத்தில் வேளாண் காடுகள் திட்டத்தில், தொடர்ந்து இந்த பணி நடக்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X