பொது செய்தி

தமிழ்நாடு

ஜெர்மன் மாப்பிள்ளையை மணந்த கோவை பெண்

Added : நவ 11, 2019
Advertisement
 ஜெர்மன் மாப்பிள்ளையை மணந்த கோவை பெண்

பெ.நா.பாளையம்:கோவையை சேர்ந்த பெண், ஜெர்மன் நாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்தார்.கோவை துடியலுார் அருகே உள்ள பன்னிமடையை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகள் வித்யபிரபா, 28; கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன், ஜெர்மன் நாட்டுக்கு பணியாற்ற சென்றார். அங்கு அதே நாட்டை சேர்ந்த மைக்கேல் ஷீல்டஸ் என்பவருடன் காதல் ஏற்பட்டது.பெற்றோர் சம்மதத்துடன் இருவரும், நம் நாட்டு பாரம்பரிய முறைப்படி, திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, மைக்கேலின் உறவினர்கள், 50 பேர் கடந்த வாரம் இந்தியா வந்தனர். நேற்று காலை, கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் வெள்ளக்கிணறு பிரிவு அருகேயுள்ள, திருமண மண்டபத்தில், இருவருக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது. இதில், இரு வீட்டார் தரப்பிலும், உறவினர்கள் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X