பொது செய்தி

இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வாழ்வை மாற்றிய 'நாணயம்'

Updated : நவ 11, 2019 | Added : நவ 11, 2019 | கருத்துகள் (19)
Advertisement

இந்த செய்தியை கேட்க

அயோத்தி வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வாழ்க்கையை 'டாஸ்' மாற்றி அமைத்தது.






இவரது தந்தை கேசாப் சந்திர கோகாய் நேர்மையான அரசியல்வாதி. அசாம் மாநில முன்னாள் முதல்வர். இவருக்கு இரண்டு மகன்கள். இருவரையும் ராணுவத்தின் 'சைனிக்' பள்ளியில் படிக்க வைக்க வசதி இல்லை. உடனே நாணயத்தை சுண்டிவிட்டு பூவா...தலையா மூலம் முடிவு செய்தார். இதில் 'டாஸ்' வென்ற அண்ணன் அஞ்சன், சைனிக் பள்ளிக்கு சென்றார். பின் இந்திய விமான படையில் சேர்ந்து உயரிய 'ஏர் மார்ஷல்' அந்தஸ்துடன் ஓய்வு பெற்றார்.






மறுபக்கம் அசாமின் திப்ருகரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் படித்த ரஞ்சன் கோகாய், டில்லி பல்கலையில் சட்டம் முடித்தார். கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் 1978ல் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். பின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்சம் தொட்டார். வடகிழக்கு மாநிலங்களிலிருந்து தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற முதல் நபர் என்ற பெருமையும் பெற்றார்.

வரும் நவ., 17ல் ஓய்வு பெற உள்ளார். அதற்குள் ரபேல் போர் விமான முறைகேடு இல்லை, சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி தொடர்பான மறுசீராய்வு மனுக்கள், ராகுல் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் அடங்கும் என்பது உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் இறுதி தீர்ப்பு வழங்க உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-நவ-201914:00:51 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் //அசாம் மாநில முன்னாள் முதல்வர். மகன்கள் இருவரையும் ராணுவத்தின் 'சைனிக்' பள்ளியில் படிக்க வைக்க வசதி இல்லை// எங்கள் முன்னாள் முதல்வர் வாரிசுகள் இன்று பல பள்ளி, கல்லூரி, பல்கலை நடத்துகிறார்கள். படித்து பட்டம் வாங்கும் அளவிற்கு அறிவு மட்டும் இல்லை ஆனாலும் உலக பணக்காரர்கள் வரிசையில் இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
11-நவ-201913:59:38 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் //அசாம் மாநில முன்னாள் முதல்வர். மகன்கள் இருவரையும் ராணுவத்தின் 'சைனிக்' பள்ளியில் படிக்க வைக்க வசதி இல்லை// நம்ம தமிழ்நாடு முன்னாள் முதல்வர் வாரிசுகள் இன்று எத்தனை பள்ளி , கல்லூரி , பல்கலை நடத்துகிறார்கள். இவர் பிழைக்க தெரியாத ஆள்போலிருக்கிறது.
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
12-நவ-201911:36:42 IST Report Abuse
Cheran Perumalமுன்னாள் முதல்வர் மட்டுமல்ல, முன்னாள் எம் எல் ஏக்கள், எம்பிக்களில் தொண்ணூறு சதவீதத்திற்கு குறையாமல் மருத்துவ, இன்ஜினியரிங் கல்லூரிகள் நடத்துகிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Rajan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-நவ-201910:40:16 IST Report Abuse
Rajan 10 ஜன்பத் ல வேலையாம், நம்ம பராசுரன் சார் என்ன குறைஞ்சிட்டார், காங்கிரஸ் கம்மிஸ் சப்போர்ட்ல cji, இவருக்கெல்லாம் மூர்க்க கேனயன் சப்போர்ட் பண்றதுல என்ன ஆச்சர்யம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X