மத்திய அமைச்சர் ராஜினாமா : பா.ஜ., - சிவசேனா கூட்டணி முறிந்தது

Updated : நவ 11, 2019 | Added : நவ 11, 2019 | கருத்துகள் (97)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி.,யும் மத்திய அமைச்சருமான அரவிந்த் சாவத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து பா.ஜ., - சிவசேனா முறிந்தது உறுதியாகி உள்ளது.latest tamil news


ஆட்சி அமைப்பது யார் : மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜ., - சிவசேனா இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் புதிய அரசு ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவி வந்தது. இந்நிலையில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.,வை ஆட்சி அமைக்க மகாராஷ்டிர கவர்னர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் பெரும்பான்மை இல்லாததால் தாங்கள் ஆட்சி அமைக்க முடியாது என பா.ஜ., கூறி விட்டது. இதனையடுத்து 2வது இடத்தில் உள்ள சிவசேனாவிற்கு ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.


latest tamil news


சட்டசபை தேர்தலில் வெறும் 56 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற சிவசேனா, ஆட்சி அமைக்க 145 எம்எல்ஏ.,களின் பலம் தேவை. இதற்காக பா.ஜ.,வை கூட்டணியில் இருந்து கழற்றி விட்டு, 54 எம்எல்ஏ.,க்களை வைத்திருக்கும் தேசியவாத காங்., உடன் கூட்டணி வைக்க சிவசேனா முயற்சித்தது. தேசியவாத காங் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் கூட்டணி அமைக்க திட்டம் வகுத்தது. ஆனால் தேசியவாத காங்., தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளதாகவும், சிவசேனா ஆட்சி அமைக்க தாங்கள் ஆதரவு அளிக்க போவதில்லை எனவும் அறிவித்தது. இருப்பினும் சிவசேனா, பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகினால் மட்டுமே தாங்கள் ஆதரவு அளிக்க போவதாக நிபந்தனை விதித்திருந்தது.


latest tamil newsமத்திய அமைச்சர் ராஜினாமா : இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சிவசேனா எம்.பி., அரவிந்த் சாவத், தனது மத்திய அமைச்சர் பதவியை தான் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இவர் மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை அமைச்சராக இருந்து வந்தார். தேசியவாத காங்.,ன் நிபந்தனையை சிவசேனா ஏற்றதன் காரணமாக அரவிந்த் சாவத் ராஜினி செய்ததாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகியதால் பா.ஜ., - சிவசேனா இடையேயான கூட்டணி முறிந்தது உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை தொடர்ந்து மத்தியிலும் பா.ஜ., -சிவசேனா கூட்டணி முறிந்துள்ளது.


latest tamil news


காங்., ஆதரவு கிடைக்குமா : இதற்கிடையில் மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்., ன் மல்லிகார்ஜூன கார்கே, இன்று காலை 10 மணிக்கு, கட்சி மேலிட வழிகாட்டுதலின்படி ஆலோசனை கூட்டம் நடக்க .ள்ளது. ஆனால் எங்களின் உண்மையான முடிவு, மக்களின் முடிவு தான். தற்போது உள்ளது போன்று எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்வோம் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
12-நவ-201900:05:18 IST Report Abuse
 nicolethomson இப்படி பண்ணிதான் தேவேகவுடாவின் கட்சி மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது , அதே போன்றதொரு நிகழ்வுகளை மகாராஷ்டிரத்தில் கண்டுவருகிறேன்
Rate this:
Cancel
krishna - chennai,இந்தியா
11-நவ-201917:28:32 IST Report Abuse
krishna உதிரன் மிக சூப்பர் ஆன கருத்து ஆனால் மிக உண்மை.இந்த கூட்டணியால் சேனா மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிக்கும் வேட்டு.சேனா என்னும் தீய சக்திக்கு விழும் ஹிந்து ஓட்டுகள் இப்போது பிஜேபி பக்கம்.காங்கிரஸ் என்னும் தேச விரோத கொள்ளையர் கூடாரத்துக்கு வரும்மூர்க்க கூட்டத்தின் VOTTU ஓவாசிக்கு போகும்.ஒரே அடியில் இரண்டு மாங்காய்.சீக்கிரம் தேர்தல் வரும் பிஜேபி தனித்து ஆட்சி பிடிக்கும்.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-நவ-201923:04:05 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்மரத்துக்கு கீழே வாயை பொழந்து கிட்டு பழம் விழும்ன்னு சொல்றே.. பலாப்பழம்.....
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-நவ-201917:04:35 IST Report Abuse
தமிழ்வேல் ஆளாளுக்கு, மீன் பிடிக்க தூண்டிலை எடுத்துக்கிட்டு கிளம்பிடுவானுவோ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X