சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணம் நடந்த சில மணி நேரத்தில் மணப்பெண்ணின் 30 பவுன் நகை திருட்டு

Added : நவ 11, 2019
Advertisement

வேலூர்: வேலூர் அருகே, திருமணம் நடந்த சில மணி நேரத்தில் வீட்டில் இருந்த மணப்பெண்ணின், 30 பவுன் நகை, மற்றும் ஒரு லட்சத்து, 36 ஆயிரம் ரூபாயை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், வாலாஜாவை சேர்ந்தவர் சரவணன், 48; பீடி தொழிலாளி. இவரது மகள் பவித்ரா, 20; இவருக்கு, நேற்று காலை, ஆரணியில் திருமணம் நடந்தது. இதனால், மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர், வீட்டை பூட்டிவிட்டு, நேற்று முன்தினம் ஆரணிக்கு சென்றனர். திருமணம் நடந்த நிலையில், மணமக்களுடன், சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தினர், வாலாஜாவில் உள்ள மணமகள் வீட்டிற்கு நேற்று மதியம், 12:00 மணிக்கு வந்தனர். வீட்டின் கதவை திறந்தபோது, அங்கு மிளகாய் பொடி தூவப்பட்டு இருப்பதை பார்த்த அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் பின்பக்க கதவு மற்றும் படுக்கை அறையில் இருந்த பீரோ ஆகியவை உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில், மணப்பெண் பவித்ராவுக்கு, திருமணத்திற்கு வழங்க வைத்திருந்த, 30 பவுன் நகை, மற்றும் ஒரு லட்சத்து, 36 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. சண்முகம் குடும்பத்தினர், அனைவரும் திருமணத்திற்கு சென்றதை அறிந்த திருடர்கள், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து, வாலாஜா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X