இருவேறு சம்பவத்தில் நீரில் மூழ்கி இருவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவேறு சம்பவத்தில் நீரில் மூழ்கி இருவர் பலி

Added : நவ 11, 2019
Share
வந்தவாசி: வந்தவாசி அருகே, இருவேறு சம்பவத்தில், நீரில் மூழ்கி இரண்டு வயது குழந்தை உட்பட இருவர் பலியாகினர்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அதியாங்குப்பத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது இரண்டு வயது குழந்தை நித்திரன், நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் காணவில்லை என தேடியபோது, வீட்டின் பின்புறம் உள்ள விவசாய கிணற்றில்

வந்தவாசி: வந்தவாசி அருகே, இருவேறு சம்பவத்தில், நீரில் மூழ்கி இரண்டு வயது குழந்தை உட்பட இருவர் பலியாகினர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அதியாங்குப்பத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது இரண்டு வயது குழந்தை நித்திரன், நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் காணவில்லை என தேடியபோது, வீட்டின் பின்புறம் உள்ள விவசாய கிணற்றில் சடலமாக கிடந்தான். விளையாடியபோது, தவறி கிணற்றில் விழுந்தது தெரியவந்தது.


* வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் விஷ்வா, 12; இவர், அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற விஷ்வா, மதிய உணவு இடைவேளையின்போது, இயற்கை உபாதைக்கு சென்றுள்ளார். பின்னர், கை, கால்கள் கழுவ, அங்குள்ள குளத்திற்கு சென்றபோது, கால் தவறி குளத்தில் விழுந்தார். அக்கம், பக்கத்தினர் மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று விஷ்வா உயிரிழந்தார். இது குறித்து, கீழ்கொடுங்காலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X