பொது செய்தி

தமிழ்நாடு

நெல் பயிருக்கு காப்பீடு: நவ., 30 கடைசி நாள்

Added : நவ 11, 2019
Advertisement

சேலம்: சேலம், வேளாண் இணை இயக்குனர் கமலா வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், 2019, ஆகஸ்ட் முதல், சாகுபடி செய்யப்படும் சம்பா நெல் பயிருக்கு, இயற்கை இடர்பாட்டால் இழப்பு ஏற்படும் பட்சத்தில், விவசாயிகளுக்கு நிவாரண நிதியுதவி அளிக்கப்படுகிறது. அதற்காக, வரும், 30க்குள், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் இணைய வேண்டும். ஒரு ஏக்கருக்கு, செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை, 470 ரூபாய். மார்பளவு புகைப்படம், நடப்பு சேமிப்பு வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை நகல், நில உரிமை பட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்களுடன், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள், பொது சேவை மையங்கள் மூலம், பிரீமிய தொகை செலுத்தி, காப்பீடு திட்டத்தில் இணைய வேண்டும். தகவலுக்கு, வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலர்களை அணுகி தகவல் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X