பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்

Added : நவ 11, 2019
Advertisement

கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் நாற்றம்: தலைவாசல், பெரியேரி, அம்பேத்கர் நகரிலிருந்து, பழைய நூற்பாலைக்கு செல்லும் வழியிலுள்ள சாக்கடை கால்வாய் பக்கவாட்டில், செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. குறிப்பாக, கால்வாயின் உள்ளே, செடிகள் தொங்குவதால், பிளாஸ்டிக் கழிவு, காகிதம் உள்ளிட்டவை செல்ல முடியாமல், ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. இதனால், துர்நாற்றம் வீசுவது குறித்து, அதிகாரிகளிடம் தெரிவித்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உடைந்த பாலத்தால் உயிருக்கு ஆபத்து: சங்ககிரி, ஆறாவது வார்டு, டி.பி.சாலையில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, சாக்கடை கால்வாய் மீது, தரைமட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. அதில், உடைப்பு ஏற்பட்டு, கற்கள் வைத்துள்ளனர். இரவில் செல்லும் வானக ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல், தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். இதுகுறித்து, பேரூராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், வாகன ஓட்டிகள் விழுவது வாடிக்கையாகிவிட்டது.

வீட்டின் மேற்புறம் மின்கம்பி: சங்ககிரி பேரூராட்சி, குப்தா செட்டியார் காலனியில், 30 ஆண்டுக்கு முன் கூரை வீடுகளாக இருந்தன. அப்போது, மின் கம்பங்கள் அமைக்கப்பட்டன. தற்போது, தார்சு வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், வீட்டின் மேற்பகுதியில், கைக்கு எட்டும் தூரத்தில் கம்பிகள் செல்கின்றன. இதனால், இடி, மின்னல் காலத்தில், ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் புகாரளித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

பாறை உருண்டு விழும் அபாயம்: மேட்டூர், காவிரிபாலம் அடிவாரம் முதல், சேலம் கேம்ப் வரை, சீதா மலையில் சாலை உள்ளது. இதில், தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மழைக்காலங்களில், பாறைகள், கற்கள் சிதறி, சாலையில் விழும். அதை, நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி, போக்குவரத்தை சீரமைப்பர். தற்போது, இரண்டாவது வளைவின் ஒரு பகுதியில், பாறையில் விரிசல் ஏற்பட்டு, சாலையில் உருண்டு விழும் நிலை உள்ளதால், உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.

சாய்ந்த மின்கம்பம் மக்கள் அச்சம்: பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டி ஊராட்சி, சூராலிச்சிக்காடு, எஸ்.ஆர்., சிட்டி எதிரே, சாலையோரம் இரும்பு மின் கம்பம் உள்ளது. அதன் மண்ணிலுள்ள அடி பாகம் துருப்பிடித்து, உறுதி தன்மையை இழந்த கம்பம், சாலையோரம் சாய்ந்த நிலையிலுள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்வதால், கம்பம் சாலையிலோ, வீட்டின் மீதோ விழும் அபாயமுள்ளது. அதனால், புதிய மின் கம்பம் அமைக்கக்கோரி புகாரளித்தும் பலனில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X