விளையாட்டு மைதானம் சீரமைக்க வலியுறுத்தல்| Dinamalar

விளையாட்டு மைதானம் சீரமைக்க வலியுறுத்தல்

Added : நவ 11, 2019
Share

சேலம்: சேலம், தாதம்பட்டியில், மாநகராட்சிக்கு சொந்தமாக, 4 ஏக்கரில், விளையாட்டு மைதானம், பூங்கா இருந்தது. ஆனால், ஏழு ஆண்டாக சரியாக பராமரிக்கவில்லை. இதனால், செடி, கொடிகள் முளைத்து, விளையாட்டு மைதான அடையாளமே இல்லை. அதை, பயன்பாட்டுக்கு கொண்டு வர, அப்பகுதி இளைஞர்கள் பலமுறை முறையிட்டும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அங்கிருந்த உபகரணங்கள் துருப்பிடித்து, சிதிலமடைந்து வருகின்றன. மேலும், விளையாட இடவசதியின்றி, இளைஞர்கள் தவிக்கின்றனர். நகருக்குள் வனம் அமைக்கும் திட்டத்தில், மைதானத்தை புதுப்பித்து, மேம்படுத்த, இளைஞர்கள் வலியுறுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X