விடுதி கட்டடத்தால் மாணவர்கள் அச்சம்| Dinamalar

விடுதி கட்டடத்தால் மாணவர்கள் அச்சம்

Added : நவ 11, 2019
Share
சங்ககிரி: அரசு விடுதி கட்டடம் சேதமடைந்து, மாணவர்கள் அச்சப்படுகின்றனர். சங்ககிரி, புதிய இடைப்பாடி சாலை, பால்வாய் தெருவில், ஆதிதிராவிடர் வீட்டு வசதி, மேம்பாட்டு திட்டத்தில், 1994ல், 12 அறைகளுடன், அரசு மாணவர் விடுதி கட்டடப்பட்டது. அதில், 35 மாணவர் படிக்கின்றனர். விடுதி காப்பாளர், சமையலர், துப்புரவு பணியாளர் உள்ளனர். ஆனால், போதிய பராமரிப்பு இல்லாததால், தற்போது, அதன் கட்டடம்

சங்ககிரி: அரசு விடுதி கட்டடம் சேதமடைந்து, மாணவர்கள் அச்சப்படுகின்றனர். சங்ககிரி, புதிய இடைப்பாடி சாலை, பால்வாய் தெருவில், ஆதிதிராவிடர் வீட்டு வசதி, மேம்பாட்டு திட்டத்தில், 1994ல், 12 அறைகளுடன், அரசு மாணவர் விடுதி கட்டடப்பட்டது. அதில், 35 மாணவர் படிக்கின்றனர். விடுதி காப்பாளர், சமையலர், துப்புரவு பணியாளர் உள்ளனர். ஆனால், போதிய பராமரிப்பு இல்லாததால், தற்போது, அதன் கட்டடம் சேதமடைந்துள்ளது. குறிப்பாக, மேற்கூரையில் சிமென்ட் பெயர்ந்து விழுந்து, கான்கிரீட் கம்பிகள் தொங்கியபடி, வெளியே தெரிகின்றன. மழைக்காலங்களில், அதன் வழியாக தண்ணீர் கசிந்து, காரை பெயர்ந்து விழுவதால், உறுதித்தன்மை குறைய தொடங்கியுள்ளது. இதனால், மாணவர்கள் அச்சப்படுகின்றனர். மழைக்காலம் என்பதால், அசம்பாவிதம் ஏற்படும் முன், அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X