சாலையோர கிணற்றால் விபத்து: தடுப்புச்சுவர் கட்ட வலியுறுத்தல்

Added : நவ 11, 2019
Advertisement

மேட்டூர்: மேட்டூர், தங்கமாபுரி பட்டணத்திலிருந்து திருத்தங்கல் காட்டுவளவு செல்லும் சாலையோரம், ஊர் பொது கிணறு உள்ளது. அதற்கு, தடுப்புச்சுவர் இல்லை. இதனால், இரவில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கிணற்றில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். கடந்த, 6ல், அப்பகுதியில் மொபட்டில் சென்ற, மேட்டூர் மின்வாரிய ஊழியர் தனபால், நாய் துரத்தியதால், சாலையோரம் ஒதுங்க முயன்றார். அப்போது, மொபட்டுடன் உள்ளே விழுந்தார். நீச்சல் தெரிந்ததால், உயிருக்கு போராடிய அவரை, மக்கள் மீட்டனர். அதனால், சாலையோரமுள்ள கிணற்றுக்கு தடுப்புச்சுவர் கட்ட, பி.என்.பட்டி பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X