திரும்பிய விளக்கு; விபத்துக்கு வழிவகுப்பு

Added : நவ 11, 2019
Advertisement

வீரபாண்டி: சேலம் - கோவை நான்கு வழிச்சாலை, பெரிய சீரகாபாடி பஸ் ஸ்டாப் அருகே, மேம்பால அடிப்பகுதியிலிருந்து, சின்ன சீரகாபாடி, வீரபாண்டிக்கு செல்ல சாலை உள்ளது. கடந்த அக்., 22ல், கொச்சியிலிருந்து, ஐதராபாத்துக்கு எரிவாயு ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து பஸ் ஸ்டாப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், பக்கத்திலிருந்த தெருவிளக்கு கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து, விளக்கு வேறு பக்கம் திரும்பியுள்ளது. இதனால், மேம்பால அடிப்பகுதி, பஸ் ஸ்டாப், இரவில் வெளிச்சமின்றி காணப்படுகிறது. சாலை மறுபுறம், தனியார் மருத்துவமனை உள்ளதால், மக்கள் நடமாட்டம் எப்போதும் காணப்படும். இரவில் வேகமாக வரும் கனரக வாகனங்கள், பஸ் ஸ்டாப், மேம்பால சாலையை கடக்கும் போது, அவர்கள் மீது மோதும் அபாயம் உள்ளதால், கம்பத்தை சீரமைத்து, விளக்கை சரியாக திருப்பி வைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X