ஊர்முழுவதும் கொசு வேட்டை: இளம்பிள்ளை ஏரியில் 'கோட்டை'

Added : நவ 11, 2019
Advertisement

வீரபாண்டி: ஊர்முழுவதும், கொசு உற்பத்திக்கு காரணமாக உள்ள இடங்களை கண்டறிந்து, அபராதம் விதிக்கும் அதிகாரிகள், அரசுக்கு சொந்தமான ஏரியில் கோட்டை விட்டுள்ளனர்.
இளம்பிள்ளை, சந்தைப்பேட்டை ஏரியில், திரவ கழிவு மேலாண் திட்டத்தில், 36 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிவுநீரிலிருந்து உருவாகும் பயோகாஸ் வாயுவால் மின்உற்பத்தி திட்டம், 2016ல் தொடங்கப்பட்டது. அதற்காக ஏரியை சுற்றி, 115 தொட்டிகள் கட்டப்பட்டன. அதில், இளம்பிள்ளை, இடங்கணசாலை குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை நிரப்பி, தேக்கி வைத்து உற்பத்தியாகும் பயோகாஸ் வாயுவை எரித்து, மின்சாரம் தயாரித்து, தெரு விளக்குகளை எரிய வைக்க திட்டமிட்டு, பணி நடந்தது. ஆனால், கழிவுநீரில் மின்சாரம் தயாரிக்க, போதிய அளவு பயோ கெமிக்கல் ஆக்சிஜன் டிமான்ட்(பி.ஓ.டி.,) இல்லாததால், இத்திட்டத்தை மாற்றி, கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டமாக மாற்றப்பட்டதாக, இரு மாதத்துக்கு முன், கலெக்டர் ராமன் தெரிவித்தார். இதுவரை, அதற்கான பணி தொடங்காத நிலையில், ஏரியில் கட்டிய தொட்டிகளில், செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது. மூடியின்றி திறந்துள்ள தொட்டிகளில், மழைநீர் தேங்கி, கொசுப்புழுக்கள் உற்பத்தி மையமாக மாறியுள்ளன. ஊர்முழுவதும், கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, அபராதம் விதிக்கும் அதிகாரிகள், இளம்பிள்ளை பேரூராட்சிக்கு சொந்தமான ஏரியில், கோட்டை விட்டுவிட்டனர். இதனால், தொற்று நோய் மையமாக மாறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X