பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - ஈரோடு

Added : நவ 11, 2019
Share
Advertisement

மின்விளக்குகளை பழுது நீக்கணும்! ஈரோடு, நான்காவது மண்டலத்துக்குட்பட்ட சென்னிமலை சாலை, கூட்ஸ் ?ஷட் பகுதி முதல் அரசு போக்குவரத்து கழக டிப்போ, ஐ.டி.ஐ., வரை தெருமின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால், பணி முடித்து விட்டுக்கு டூவீலரில் செல்பவர்கள், வேகத்தடை மற்றும் குண்டும் குழியுமான இடங்கள் தெரியாமல் தட்டுத் தடுமாறி செல்கின்றனர். அப்பகுதியில் உள்ள மின் விளக்குகளை சரிப்படுத்த வேண்டும்.

- எஸ்.ரமேஷ், ரங்கம்பாளையம்.

மேற்கூரையை சீரமைக்க வேண்டும்: ஈரோடு, பஸ் ஸ்டாண்ட் மேட்டூர் சாலை பகுதியில், பாதசாரிகள் கடந்து செல்ல நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேலே செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் மூலம் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக பிளாஸ்டிக் மேற்கூரை போடப்பட்டுள்ளது. தற்போது அது, காற்றில் சிதைந்து விட்டது. இதை சரிப்படுத்த வேண்டும். இதுகுறித்து, பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

- வி.பாலசுப்பிரமணியம், ஈரோடு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X