2,500 டன் புழுங்கல் அரிசி ரயிலில் ஈரோடு வருகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2,500 டன் புழுங்கல் அரிசி ரயிலில் ஈரோடு வருகை

Added : நவ 11, 2019
Share

ஈரோடு: ஈரோடுக்கு, 2,500 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரயில் மூலம் வந்தது. தெலுங்கானா மாநிலம், மிர்யாலகுடாவிலிருந்து,2,500 டன் புழுங்கல் அரிசி, சரக்கு ரயில் மூலம், நேற்று ஈரோடு ரயில்வே கூட்ஸ் ஷெட்டிற்கு வந்தது. இவை, பொது வினியோகத் திட்டத்தில், ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளன. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், அரிசி மூட்டைகளை இறக்கி வைத்தனர். அவை, தமிழ்நாடு வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X