பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண்துறை 'மாதிரி கிராம திட்டம்': ரசாயன உரங்களை குறைக்கும் முயற்சி தீவிரம்

Added : நவ 11, 2019
Advertisement

ஈரோடு: ''ஈரோடு மாவட்டத்தில், 14 ஒன்றியங்களிலும், தலா ஒரு கிராமத்தில், மண் வள அட்டை பரிந்துரைப்படி, 'மாதிரி கிராமம் திட்டத்தில்' நுண்ணுயிர் உரம் மூலம் சாகுபடி செய்யப்படுகிறது,'' என, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பிரேமலதா கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: முதற்கட்டமாக மூன்று ஆண்டுகள், அனைத்து பகுதியிலும் மண் மாதிரி சேகரித்து, விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கி, 'என்ன பயிர் செய்யலாம்; எவ்வளவு உரமிடலாம்' என, பரிந்துரைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக தற்போது, மண் வள அட்டை வழங்கப்படுவதுடன், அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, 'செலவு குறைவு, மகசூல் அதிகம், மண் வளம் பாதுகாப்பு' குறித்து விளக்கம் அளிக்க, ஒன்றியத்துக்கு ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 14 கிராமங்களில் தலா, 150 முதல், 180 விவசாயிகளுக்கு, 2,000 ரூபாய் மானியத்தில் நுண்ணுயிர் உரம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம், 1,616 மண் வள அட்டை மூலம், அந்த விவசாயி விரும்பி பயிரிட்ட பயிருக்கு ஏற்ற நுண்ணுயிர் உரம், பயோமெட்ரிக் முறையில் ஆதார், விரல் ரேகை பதிவுடன் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, அவர் என்ன பயிர் செய்கிறார் என்ற விபரத்துடன், இ-சிட்டா, ஆதார் எண், மண் வள அட்டை ஆகியவற்றை வழங்க வேண்டும். இவர்களது மண்வள அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்டு விட்டதால், வரும் காலங்களில், உர பரிந்துரையை தொடர்ந்து பெற முடியும். இதன் மூலம் தேவையற்ற உரம் தெளிப்பது தவிர்க்கப்பட்டு, மண் வளம் சில பருவத்தில் சிறப்பாகும். பிற கிராமங்களில் வருமாண்டுகளில் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X