பொது செய்தி

தமிழ்நாடு

இலவச பஸ் பாஸ் வழங்காததால் கல்லூரி மாணவர்கள் அவதி

Added : நவ 11, 2019
Advertisement

மொடக்குறிச்சி: இலவச பஸ் பாஸ் வழங்க, பாரதியார் பல்கலை கலைக் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மொடக்குறிச்சி ஒன்றியம், எழுமாத்தூர் அருகே கனகமலையடிவாரத்தில் பாரதியர் பல்கலை கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. 1,600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். முதலாமாண்டு படிக்கும், 1,200க்கும் மேற்பட்டோருக்கு தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் வழங்காமல் உள்ளதால், கடும் அவதிக்கு ஆளாகின்றனர். கல்லூரிக்கு மாணவர்கள் வந்து சேருவதில் காலதாமதம் ஆகிறது. 'கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, இலவச பஸ் பாஸ் விரைந்து வழங்க வேண்டும்' என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்லூரி முதல்வர் வடிவேல் கூறியதாவது: பஸ் பாஸ் வழங்குவது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம், கல்லூரி நிர்வாகம் பேசி வருகிறது. இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு படிக்கும் மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்படுத்தி, பயணம் மேற்கொள்ளலாம். இதுவரை பாஸ் கிடைக்க பெறாத அனைத்து மாணவர்களும், கல்லூரி அடையாள அட்டையை பயன்படுத்தி பஸ்சில் பயணம் மேற்கொள்ளலாம். ஓரிரு வாரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பஸ் பாஸ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X