புதிய வாக்காளர்களை சேர்க்க ஆய்வு கூட்டத்தில் யோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய வாக்காளர்களை சேர்க்க ஆய்வு கூட்டத்தில் யோசனை

Added : நவ 11, 2019
Share

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சுருக்க, திருத்தம் மற்றும் செம்மைப்படுத்துவது தொடர்பாக, அனைத்து அரசியல் கட்சி பிரதி நிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் கதிரவன் முன்னிலை வகித்தார். வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை இயக்குனர் கருணாகரன் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கடந்த, மார்ச், 26ல் 18 லட்சத்து,83 ஆயிரத்து, 674 வாக்காளர்கள் உள்ளனர். இம்மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 2,213 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. இவற்றுக்கு தலா ஒரு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும், 25ல் ஈரோடு மாவட்ட அளவிலான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் குறித்து, அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் நடக்கும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, 18 வயது பூர்த்தியான தகுதி உள்ள அனைத்து வாக்காளர்களையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். எனவே, 18 வயது நிரம்பிய வாக்காளர் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து, 100 சதவீதம் வாக்களிக்க செய்வதில் ஒருங்கிணைந்த பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், ஆர்.டி.ஓ., முருகேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ், தேர்தல் பிரிவு தாசில்தார் சிவகாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X