பொது செய்தி

தமிழ்நாடு

புன்செய்புளியம்பட்டியில் பயனற்ற வணிக வளாக கடைகள்: நகராட்சிக்கு பல லட்சம் வருமான இழப்பு

Added : நவ 11, 2019
Advertisement

பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில் உள்ள நகராட்சி வணிக வளாக கடைகளுக்கான ஏலத்தொகை கூடுதல் என்பதால், ஏலம் எடுக்க யாரும் முன்வராமல் பூட்டி கிடக்கிறது.
புன்செய்புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமாக, பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம், கோவை சாலை, மாதம்பாளையம் சாலை, மறைமலை அடிகள் வீதி ஆகிய பகுதிகளில், மொத்தம், 112 கடைகள் உள்ளன. இவை, 2018 டிசம்பர் மாதம் பொது ஏலம் விடப்பட்டன. கடைகளை ஏலம் எடுத்தவர்களில் சிலர், கடையை நடத்துவதில்லை. கடைகளை எடுத்த, 25க்கும் மேற்பட்டோர், கடந்த ஆண்டு, நகராட்சியில் சரண்டர் செய்தனர். கூடுதல் தொகை ஏலம் என்பதால் யாரும் எடுக்க முன்வரவில்லை. சில கடைகள் ஏலம் எடுத்தவர்கள் கூடுதல் வாடகை என்பதால், கடை நடத்த முடியாமல் நகராட்சி வசம் திருப்பி ஒப்படைத்து விட்டனர். இதனால், 25க்கும் மேற்பட்ட கடைகள் பயன்பாடின்றி பூட்டி கிடக்கின்றன. அதிகாரிகளின் மெத்தனத்தால் ஆண்டிற்கு, பல லட்சம் ரூபாய் நகராட்சிக்கு வருமான இழப்பு ஏற்பட்டு வருகின்றது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X