தமிழ்நாடு

விவசாயிகளுக்கு நம்பிக்கை தரும் பருவமழை: சராசரியில் 70 சதவீதம் பெய்ததால் பயிர்கள் செழிப்பு

Added : நவ 11, 2019
Advertisement

ஈரோடு: விவசாயிகளுக்கு நம்பிக்கை தரும்படி, நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை இதுவரை, 70 சதவீதம் பெய்துள்ளதால், பயிர்கள் செழிப்படைந்துள்ளன.
நடப்பு, 2019ல் ஈரோடு மாவட்டத்தில் கோடை கால மழை சராசரியாக, 168.22 மி.மீ., பெய்ய வேண்டும். ஆனால், 117.01 மி.மீ., மட்டுமே பதிவானது. ஆனால், தென்மேற்கு பருவமழை சராசரியான, 239.91 மி.மீ., பெய்வதற்கு பதில், 252.79 மி.மீ., பெய்து நம்பிக்கை தந்தது. சாகுபடி காலமான தென்மேற்கு பருவ மழை பெய்யும் ஜூனில், 29.21 மி.மீ.,க்கு பதில் 42.80 மி.மீ.,ம், ஜூலையில், 34.71 மி.மீ.,க்கு பதில், 19.21 மி.மீ.,ம், ஆக.,ல் 72.02 மி.மீ.,க்கு பதில், 62.69 மி.மீ.,ம், செப்.,ல் 103.96 மி.மீ.,க்கு பதில், 128.09 மி.மீ.,ம் மழை பெய்தது. சராசரியைவிட, 12.8 மி.மீ., கூடுதலாக ஆறுதல் தந்தது. தென்மேற்கு பருவமழையை பின் தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை இடைவிடாது பெரும்பாலான நாட்கள் பதிவானது. வடகிழக்கு பருவமழையின் சராசரி மழை பதிவு, 286.60 மி.மீ., ஆகும். அக்., மாத சராசரி, 141.20 மி.மீ., என இருந்தாலும், 219.05 மி.மீ., மழை பதிவானதால், வயல்களில் நீர் சேர்ந்து, கிணறு, ஆழ்துளை கிணறு, குளம், ஏரிகளிலும் நீர் தேங்கி, நிலத்தடி நீர் மட்டத்தையும் உயர்த்தி உள்ளது. தற்போது, காவிரி, பவானி ஆகிய ஆறு, கீழ்பவானி, காளிங்கராயன், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை ஆகிய வாய்க்கால்களிலும் தண்ணீர் போதிய அளவு கிடைப்பதால், இந்தாண்டு பயிர்கள் செழித்து, விவசாயம் நம்பிக்கை உடையதாக மாறி உள்ளது. நடப்பு நவ.,ல் சராசரியாக, 125.37 மி.மீ., மழை பெய்வதில், நேற்று முன்தினம் வரை, 25 மி.மீ.,க்கு மேல் பதிவாகி உள்ளது. இதன் மூலம், மற்றொரு போக சாகுபடியும் உறுதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X