சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மலைப்பாதை வளைவில் சிக்கிய லாரியால் நெரிசல்

Added : நவ 11, 2019
Advertisement

அந்தியூர்: கர்நாடாகாவிலிருந்து, மக்காச்சோளம் ஏற்றிக் கொண்டு, தமிழக எல்லையான கர்ககேண்டி, பர்கூர் மலைப்பாதை வழியாக, ஈரோடு செல்வதற்காக, 16 சக்கரங்கள் கொண்ட கனரக லாரி, நேற்று மதியம், 2:30 மணியளவில், வரட்டுப்பள்ளம் அணை முதல், சுலோப் வழியாக அந்தியூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. சுலோப் வளைவில், எதிர்பாராத விதமாக லாரி சிக்கியது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சாலையின் இருபுறமும், வாகனங்கள் நீண்ட வரிசையில், 5 மணி நேரத்திற்கு மேலாக நின்றன. அங்கு வந்த பர்கூர் போலீசார், பொக்லைன் இயந்திரத்தை அந்தியூரில் இருந்து வரவழைத்து லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், இந்த மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு, ஆறு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் கனரக லாரி வளைவில் திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டதால் மீண்டும், 5 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X