சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மலை தேனீக்கள் கடித்து 16 பேர் அனுமதி

Added : நவ 11, 2019
Advertisement

மொடக்குறிச்சி: அரச்சலூரில், தேனீக்கள் கடித்து, 16 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், தச்சங்காட்டுவலசு, காரக்காட்டுத் தோட்டத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவரது தோட்டத்தில், 30 அடி உயர தென்னை மரத்தில் மலைத்தேனீக்கள் கூடு கட்டி வாழ்ந்து வந்தன. நேற்று, தென்னை மட்டை விழுந்து தேன் கூடு சேதமானது. ஆயிரக்கணக்கான தேனீக்கள் அரச்சலூர், விளக்கேத்தி சாலையில் நடந்து சென்றவர்களையும், வாகனத்தில் சென்றவர்களையும் கடிக்கத் தொடங்கின. தேனீக்களின் படை பலத்திற்கு, பொதுமக்கள் ஆங்காங்கே தெறித்து ஓடியதுடன், சிலர் வாகனங்களை அங்கேயே போட்டு விட்டு தப்பித்துச் சென்றனர். மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையில், தேன் கூடுகளை அழித்தனர். தேனீக்கள் தாக்குதலுக்கு, வீரான், 70, விஜயா, 38, சாய்ரமணி, 50, கிருஷ்ணமூர்த்தி, 32, விஸ்வநாதன், 43, யமுனா, 29, ரவி, 46, கனகவேல், 36, லோக நாதன், 45, பழனி ஆகியோர் பாதிக்கப்பட்டு, அரச்சலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தவிர, படுகாயமடைந்த அண்ணாநகரை சேர்ந்த மகேஷ், 30, கீதா, 26, அருக்காணி, 65, பண்ணை கிணறு ரியாஷ், 8, தனுஷியா, 11, கரூர் மாவட்டம் கல்குவாரியை சேர்ந்த லீலாவதி என, ஆறு பேர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X