சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் 4 பெண்களிடம் சங்கிலி பறிப்பு: ஈரோட்டில் வீட்டை விட்டு வெளியேற முடியாத அவலம்

Added : நவ 11, 2019
Advertisement

ஈரோடு: ஈரோட்டில், ஒரே நாளில் அடுத்தடுத்து, நான்கு சங்கிலிப்பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஈரோடு, கொல்லம்பாளையம், பார்வதி கிருஷ்ணன் வீதியை சேர்ந்த பரமசிவம் மனைவி சரஸ்வதி, 71. இவர் நேற்று முன் தினம் மாலை வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் இருவர் வந்தனர். பைக் ஓட்டியவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார், பின்னால் அமர்ந்து இருந்தவர் ஹெல்மெட் அணியவில்லை. சரஸ்வதி அருகே வந்து முகவரி விசாரிப்பதுபோல் நடித்து, சரஸ்வதி கழுத்தில் இருந்த ஆறு பவுன் தங்க தாலி கொடியை பறித்து பைக்கில் ஏறி தப்பி சென்றார். சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


* ஈரோடு, சுப்பிரமணிய கவுண்டன் வலசு மேற்கு பகுதியை சேர்ந்த கண்ணப்பன் மனைவி சிவகாம சுந்தரி,47; பெரிய வலசு பகுதியில் உள்ள மில்லில் பணியாற்றி வருகிறார். நேற்று முன் தினம் மாலை பணி முடித்து பெரியவலசு மாரியம்மன் கோவில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் இருவர் வேகமாக வந்தனர். பைக் ஓட்டிய நபர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். பின்னால் அமர்ந்து இருந்த நபர் ஹெல்மெட் அணியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்த, நான்கு பவுன் தங்க செயினை பறித்து கொண்டு பைக்கில் தப்பி சென்றனர். ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


* ஈரோடு, நாடார் மேட்டை சேர்ந்தவர் வெங்கடேசன். கட்டிட மேஸ்திரி. இவர் மனைவி மாலதி, 45. ஈரோடு ஸ்டேட் பாங்க் ரோட்டில் உள்ள கம்ப்யூட்டர் கடையில் வேலை செய்கிறார். நேற்று முன் தினம் காலை, குப்பையை கொட்ட அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது பைக்கில் அதிவேகமாக வந்த இருவர், மாலதி கழுத்தில் இருந்த, 2.5 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.


* ஈரோடு, பழனிகவுண்டர் தெருவை சேர்ந்த சம்பத் குமார் மனைவி மண்ணீஸ்வரி, 32. நேற்று முன் தினம் மாலை, ஈரோடு - சத்தி ரோடு, முத்துசாமி வீதியில் மாவு அரைக்க சென்றார். பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் அவரது கழுத்தில் இருந்த, ஐந்து பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். இவ்விரு சம்பவங்கள் குறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


* இதேபோல் ஈரோடு மூலப்பட்டறை பகுதியில் நேற்று முன் தினம் மாலை, ரோட்டோரம் நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த இருவர், தங்க செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் அப்பெண், தங்க செயினை பிடித்து கொண்டதால் செயின் தப்பியது. இதுபற்றி புகார் ஏதும் தரவில்லை. இத்தகவலை கருங்கல்பாளையம் போலீசார் உறுதிபடுத்தி உள்ளனர். தொடர் வழிப்பறி சம்பவங்களால், பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக முதல்வர் பாதுகாப்பு, அயோத்தி தீர்ப்பு பாதுகாப்புக்கு போலீசார் சென்றதை நன்கு அறிந்து, அடுத்தடுத்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் உயர் அதிகாரிகள் நேரடியாக களம் இறங்கி, பைக்கில் வந்து வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X