தின்பண்டங்களால் குரங்குகளுக்கு கொண்டாட்டம்: சென்னிமலை - ஊத்துக்குளி ரோட்டில் விபத்து அபாயம்

Added : நவ 11, 2019
Advertisement

சென்னிமலை: சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் மெயின் ரோட்டில், பயணம் செய்வோர் தின்பண்டங்களை சாலையில் வீசுவதால், அங்கு சுற்றும் குரங்கு கூட்டத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் ரோட்டில், தோப்புப்பாளையம் கடந்து சென்றால் செலமகவுண்டம்பாளையம் வரை, வனப்பகுதியாக உள்ளது. இங்கு பழனியாண்டவர் கோவில் உள்ளது. இவ்வழியாக செல்வோர் இங்குள்ள பழனியாண்டவரை தரிசனம் செய்து விட்டு செல்வர். அப்போது அங்கு இருந்த குரங்குகளுக்கு தின்பண்டங்களை வைத்து பழக்கினர். தின்பண்டங்களுக்காக வனப்பகுதியில் இருந்த குரங்குகளும், அங்கு வந்து தங்க ஆரம்பித்தன. குரங்கு கூட்டம் பெருகிவிட, இந்த வழியாக செல்வோர் அனைவரும் பொரி, கடலை பழம், பிஸ்கட் போன்ற தின்பண்டங்களை போட்டு செல்கின்றனர். இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லுவோரை சூழ்ந்து கொள்ளும் குரங்குகள், தின்பண்டங்கள் போடுகிறார்களா என பார்க்கின்றன. மேலும் சாலையின் ஓரத்தில் இருந்து தின்பண்டங்களை போடுவதால், குரங்குகள் கூட்டமாக சாலையில் அங்குமிங்கும் ஓடி திரிகின்றன. அப்பகுதியில் வேகமாக வரும் வாகனங்களால் குரங்குகளுக்கும்; குரங்கு கூட்டத்தால் இரு சக்கரவாகனத்தில் செல்வோரும் விபத்தில் சிக்கும் நிலை உருவாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X