காரிமங்கலம் யூனியனில் டெங்கு தடுப்பு பணி தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காரிமங்கலம் யூனியனில் டெங்கு தடுப்பு பணி தீவிரம்

Added : நவ 11, 2019
Share

காரிமங்கலம்: காரிமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட இண்டர்மங்கலம், பெரியாம்பட்டி, பேகாரஹள்ளி, காளப்பனஹள்ளி, பைசுஹள்ளி, கெண்டிகானஹள்ளி ஆகிய பஞ்.,ல் டெங்கு காய்ச்சல் தடுப்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, மேற்கண்ட பஞ்.,க்கு உட்பட்ட கிராமப்புறங்களில் தேங்கிய குப்பை மற்றும் மழைநீர் அகற்றல், கழிவு நீர் கால்வாய் தூர்வாருதல், சாலையோரம் மற்றும் வீடுகளுக்கு அருகில் தேங்கி கிடந்த தேங்காய் மட்டை, சிரட்டைகள் ஆகியவற்றை துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்கள் அகற்றினர். இப்பகுதிகளில் நவீன இயந்திரம் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டது. பள்ளிகளில் மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. மேலும், பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. இப்பணிகளை, பி.டி.ஓ.,க்கள் வெங்கடேசன், வடிவேலன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, அந்தந்த பஞ்., செயலாளர்கள் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X