பொது செய்தி

தமிழ்நாடு

நல்லம்பள்ளி யூனியனில் சிறப்பு கிராம சபைக்கூட்டம்

Added : நவ 11, 2019
Advertisement

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி யூனியன், சிவாடி, மாதேமங்கலம், நத்தஹள்ளி, இண்டூர் பஞ்., களில் சிறப்பு கிராம சபைக்கூட்டங்கள் நடந்தன.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே, சிவாடி பஞ்சாயத்தில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடந்தது. பஞ்., செயலாளர் சித்ரா தலைமை வகித்தார். ஒன்றிய பார்வையாளர் மலர்கொடி பங்கேற்று திட்டங்கள் குறித்து பேசினார். அப்போது, ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில், 2020-21 நிதியாண்டில் என்ன என்ன பணி செய்வது, புதிய பணிகளுக்கான திட்டம் எவ்வாறு தயாரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் உள்பட பலர் பேசினார். மாதேமங்கலம் பஞ்., வெங்கட்டம்பட்டியில் நடந்த கூட்டத்திற்கு பஞ்., செயலாளர் அன்னபூரணி தலைமை வகித்தார். ஒன்றிய பார்வையாளராக, சாலை ஆய்வாளர் சரவணன் கலந்து கொண்டார். இதில், 100 வேலைதிட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இண்டூரில் நடந்த கூட்டத்திற்கு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிசங்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில், 2020-21ம் ஆண்டுக்குரிய கிராம வளர்ச்சிப்பணிகள் தேர்வு, சிமென்ட் சாலை அமைப்பது, பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்துதல், தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பஞ்., செயலாளர் கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர். நத்தஹள்ளி பஞ்., சில் நடந்த கிராம சபைக்கூட்டத்திற்கு, தாசில்தார் சவுகத்அலி தலைமை வகித்தார். இதில், பொதுமக்களிடமிருந்து முதியோர் பென்ஷன், திருமண உதவித்திட்டம், பட்டா மாறுதல் போன்ற கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில், ஆர்.ஐ., ஷகின்தாஜ், வி.ஏ.ஓ., முனுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X