பொது செய்தி

தமிழ்நாடு

அரூர் அரசு மருத்துவமனையில் குடும்ப நல இயக்குனர் ஆய்வு

Added : நவ 11, 2019
Advertisement

அரூர்: அரூர் அரசு மருத்துவமனையில், குடும்ப நல இயக்குனர் ஹரிசுந்தரி நேற்று ஆய்வு மேற்கொண்டார். தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு மருத்துவமனையில், தினமும், 800க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் மற்றும், 90க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மதியம், அரூர் அரசு மருத்துவமனைக்கு வந்த குடும்ப நல இயக்குனர் (பொறுப்பு) ஹரிசுந்தரி, காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், குடிநீர், சுகாதார வசதிகள், மருந்து வழங்கும் முறைகள், மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் பிரிவின் செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து, ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X