தமிழ்நாடு

தக்காளி சந்தையில் வியாபாரிகள் சிண்டிகேட்: விவசாயிகள் பாதிப்பு

Added : நவ 11, 2019
Advertisement

பாலக்கோடு: பாலக்கோடு தக்காளி சந்தையில், வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து, விலை நிர்ணயம் செய்வதால், விவசாயிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி சந்தைக்கு விவசாயிகள் நாள்தோறும், 100 முதல், 150 டன் வரை தக்காளியை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கிருந்து, பல்வேறு பகுதிகளுக்கு, விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், வியாபாரிகள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து, தக்காளிக்கு விலை நிர்ணயம் செய்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு திருமண சீசன், வரத்து குறைவு போன்ற நேரங்களில், போதிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு தக்காளி வாங்கும் வியாபாரிகள், அதை கை மாற்றி விட்டு, அதிக வருமானம் பெறுகின்றனர். இதை தடுக்க, தக்காளிக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து உழவர் பேரியக்க மாநில அமைப்பு துணை செயலாளர் முருகேசன் கூறியதாவது: பாலக்கோடு தக்காளி சந்தையில், வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து, விலை நிர்ணயம் செய்வதால், விவசாயிகளுக்கு வர வேண்டிய லாபம் முழுவதும், தக்காளி வியாபாரிகளுக்கும், இங்கு செயல்படும் இடைத்தரகர்களுக்கும் செல்கிறது. விவசாயிகளை இவர்களிடமிருந்து காப்பாற்ற, மாவட்ட நிர்வாகம் உழவர் சந்தையில் தக்காளி விலை நிர்ணயம் செய்வது போல், தினந்தோறும் தக்காளியின் வரத்தை பொறுத்து, கொள்முதல் மற்றும் விற்பனை விலையை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X