பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்க மீண்டும் தடை

Added : நவ 11, 2019
Advertisement

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து வினாடிக்கு, 18 ஆயிரத்து, 200 கன அடியாக அதிகரித்துள்ளதால், பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் நேற்று மீண்டும் தடை விதித்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடரும் மழையால், கர்நாடகா அணைகளில் இருந்து, காவிரியாற்றில், தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு வினாடிக்கு, 8,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 8:00 மணிக்கு, 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இது, மாலை, 6:00 மணிக்கு, மேலும் அதிகரித்து வினாடிக்கு, 18 ஆயிரத்து, 200 கன அடியானது. இதனால், ஒகேனக்கல் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த, 5ல், நீர்வரத்து குறைந்ததால், ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. நேற்று, ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், பரிசல் இயக்க, மாவட்ட நிர்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது. ஆற்றில் குளிக்க மாவட்ட நிர்வாகத்தின் தடை, நேற்று, 94வது நாளாக நீடிக்கப்பட்டது. பரிசலில் செல்லவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் தடையால், ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள், நேற்று ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X