பொது செய்தி

தமிழ்நாடு

அருங்காட்சியக வெள்ளி விழாவை கொண்டாட வரலாற்று குழு தீர்மானம்

Added : நவ 11, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: அரசு அருங்காட்சியக வெள்ளி விழாவை, ஒரு ஆண்டிற்கு கொண்டாட, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் கூட்டம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்ட அரங்கில் நடந்தது. தலைவர் நாராயணமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் டேவீஸ் வரவேற்றார். கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம் துவங்கி, 25 ஆண்டுகள் முடிந்ததை கொண்டாடும் வகையில், ஓராண்டு முழுவதும் வெள்ளி விழா கொண்டாடுவது. வெள்ளிவிழாவின் துவக்க விழாவை வரும், 15ல் நடத்துவது. வெள்ளி விழாவையொட்டி, ஆண்டு முழுவதும் பள்ளி மாணவ, மாணவியருக்கு பயனுள்ள நிகழ்வுகளை நடத்துவது. அருங்காட்சியகம் பற்றிய விழிப்புணர்வும், அதை அதிகமானோர் பார்த்து பயனடையும் வகையில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அருங்காட்சியத்தில் போட்டிகள் நடத்துவது. வரலாற்றை நோக்கி மாணவர்களும், மாணவர்களை நோக்கி வரலாறும் என்ற திட்டத்தை அமல்படுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், மதிவாணன், என்றிபவுல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X