பொது செய்தி

தமிழ்நாடு

கிராமப்புறங்களில் நடமாடும் கால்நடை சிகிச்சை ஆம்புலன்ஸ்

Added : நவ 11, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கிராமப்புறங்களில், நடமாடும் அவசர கால்நடை சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கான அவசர மருத்துவ சேவையை இருப்பிடத்திலேயே வழங்கவும், தேவைப்பட்டால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தொடர் சிகிச்சைக்காக அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு மாற்றிடும் வகையில், சேவைகள் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்தார். இதற்காக, தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம், 2016-2017 ஆண்டில், 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம், 22 வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட, 22 மாவட்டங்களுக்கு தமிழக முதல்வர், கடந்த, 5ல் வழங்கினார். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள நகரும் கால்நடை மருத்துவ அவசர ஊர்தியை கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டார். கால்நடைகளின் அவசர சிகிச்சைகளை, அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் சிகிச்சை வசதி கிடைக்காத விவசாயிகள் '1962' என்ற இலவச எண்ணை அழைத்து, கால்நடைகளுக்கான மருத்துவ சேவையை இலவசமாக பெறலாம். நிகழ்ச்சியின்போது, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் மனோகரன், துணை இயக்குனர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X