கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் காலபைரவர் கோவில், 12ம் ஆண்டு காலபைரவாஷ்டமி பெருவிழா, இன்று முதல், 21 வரை நடக்கிறது. இதையொட்டி, 12 காலை கொடியேற்றமும், ஐங்கரன் வேள்வியும், மாலை, விநாயகர் நகர்வலமும் நடக்கிறது. 13 காலை, 63 நாயன்மார்கள் குடமுழுக்கு நிகழ்ச்சியும், மாலை, வழக்காடு மன்றமும், இரவு பக்த மார்க்கண்டேயர் நாடகமும் நடக்கிறது. வரும், 14 காலை, திருமுருகன் தீந்தமிழ் வேள்வி, ஆலமர்ச்செல்வர் சிறப்பு அபிஷேகம், சுப்பிரமணியம் பெருமாள் நகர்வலம், 15 காலை, திருமுறை வேள்வி, பகல், 2:00 மணிக்கு, முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. 16 காலை, சொர்ணாகர்ஷண பைரவர் வேள்வியும், திருநீற்று தெய்வநலம் சொற்பொழிவும், மாலை பைரவர் நகர்வலமும் நடக்கிறது. 17 காலை, பைரவநாதர் திரிபுர பைரவி அம்மை திருக்கல்யாணமும், மாலையில் அம்மையப்பர் நகர்வலமும் நடக்கிறது. 18 காலை, திருமுறை வேள்வியும், மாலை சொற்பொழிவும் நடக்கிறது. 19 காலை, 4:30 மணிக்கு, சிவபூஜையும், காலபைரவருக்கு தீந்தமிழ் வேள்வி, அபிஷேகம், பால்குட ஊர்வலமும் நடக்கிறது. 21 காலை திருமுறை வேள்வியும், மாலை சிறப்பு திருமஞ்சனம் மற்றும் கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கால பைரவ அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE