ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த மேக்கலகவுனூர் கிராமத்தில், வால்மீகி ஜனசேனா நலச்சங்கம் சார்பில், பொதுக்கூட்டம் மற்றும் வால்மீகி ஜெயந்தி விழா நடந்தது. சீனிவாசன் தலைமை வகித்தார். வெங்கடேசப்பா முன்னிலை வகித்தார். ராஜேஷ் வரவேற்றார். கர்நாடகா மாநிலம், சிக்கப்பல்லாபூர் பிரம்மானந்தா சுவாமிகள், கர்நாடகா வால்மீகி யுவசேனா தலைவர் நாராயணசாமி ஆகியோர் பேசினர். கூட்டத்தில், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை போல், வால்மீகி வேடர் குலத்தார் மக்களை எஸ்.டி., பட்டியலில் சேர்க்க வேண்டும். இது தொடர்பாக, 200க்கும் மேற்பட்டோர், தமிழக முதல்வரை நேரில் சந்திப்பது. சட்ட ரீதியாக வால்மீகி வேடர் குலத்தார் மக்களை எஸ்.டி., பட்டியலை சேர்க்க ஏற்பாடுகள் செய்வது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செய்தி தொடர்பாளர் சீனிவாசன் நன்றி கூறினார். முன்னதாக, மேக்கலகவுனூர் கிராமத்தில் உள்ள அம்மனுக்கு, கலசங்களுடன் சென்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE